Saturday, March 1, 2008

இறுதி நம்பிக்கையும்...















வேண்டுதலின்
இறுதி நம்பிக்கையும்
அறுபட்ட பின்...

ஒரு முறை உரக்க சிரிக்க
வேண்டும்

முகம் கழுவ வேண்டும்

சவரம் செய்து
முகத்தை பளபளப்பாக வேண்டும்

முடிந்தால்
தலைமுடியை
வேறுவிதமாக சீவி
பார்க்கலாம்.

மொட்டையடிக்கலாம்

திரந்த வெளியில்
சுவாசித்து
மூச்சை
சத்தத்துடன் வெளியிடலாம்

யாரையாவது வெறுமனே
புகழலாம்

எல்லா கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.

ஒரு முறை
சுய இன்பம் கொண்டு
சோர்வாகி
உறங்கிவிடலாம்.

1 comment:

Anonymous said...

கடைசி வரிகளின் அவசியம் என்ன?
எதார்த்தமா ? அந்தரங்கமா ?
உங்கள் திருப்திக்காக எழுந்த வரிகளா அவை?
தவிர்த்திருக்கலாம்... :-(