
நீ தான் தொடங்கினாய் என
நான் தப்பித்துக்கொள்கிறேன்
அதன் மூலம் உன்னில்
குற்றவுணர்வை ஏற்றுகிறேன்
உன் நடத்தையில் உமிழ்கிறேன்
தொடர்ந்து புலம்பி
இரக்கம் ஏற்படுத்த முயல்கிறேன்
கரிக்கும் இரத்தம்
உமட்டும் போதெல்லாம்
உன்னையும் வாந்தியெடுக்கிறேன்
எதுவும் முடியாமல் போக
கடிதம் எழுதுகிறேன்
சொற்களை நேர்ப்படுத்துகிறேன்
என் நோய்க்கு
உன் பெயரை எதிர்ப்பார்க்கிறேன்
இதுதன் இறுதியென
உன் எண்களை
இருவதாவது முறையாக அழுத்துகிறேன்
மன்னிப்பு கேட்கிறேன்
அப்போது
நீ மன்னித்து
சில நிமிடங்கள் கடந்திருக்கும்
1 comment:
உங்களின் அடுத்த காதலியின் வருகை எப்போது?
லண்டன் பயணத்திற்கு பிறகா?
வாழ்த்துகள் !
Wish all the Best & God Bless You
Best Wishes,
Meha
Post a Comment